கோவை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல ஈட்டுறுதி மூலம் பணம் செலுத்துபவர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக பலர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தமிழக அரசிடம் சில மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் கொரோனா சிகிச்சை பெற வரும் நபர்கள் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவமனை முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
மேலும், இதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் மக்கள் பயன்படும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.