கோவை: கோவை மாவட்டத்தில் 96 சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி பெறாத தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வரும் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர், வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. இதனால், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ.2 ஆயிரம் நிதி தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கட்டுமான வாரியத்தில் 35 ஆயிரத்து 67 தொழிலாளர்கள், அமைப்புசாரா வாரியத்தில் 65 ஆயிரத்து 35 தொழிலாளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 102 தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று நிதி பெற தகுதியானவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வங்கி கணக்கு உள்ளவர்கள், வங்கி கணக்கு விவரங்களை முறையாக சமர்பித்தவர்கள் என 96 சதவீதம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘கொரோனா நிதி பெற வங்கி கணக்கு இல்லாத தொழிலாளர்களுக்கு, அலுவலகம் மூலம் தபாலில் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் அந்த முகவரில் இல்லை என நிதி தரும்ப வந்துவிட்டது. அதே போல், சிலருக்கு வங்கி கணக்கிற்கு அனுப்பட்ட நிதியும் சில காரணங்களுக்காக திரும்ப வந்துவிட்டது."
இது தொடர்பாக தொழில் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது எனவும் அதன் படி நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் கொரோனா நிதி பெறாதவர்கள் வரும் 14ம் தேதிக்குள் வங்கி கணக்கு விவரங்களை ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.