வால்பாறையில் முறையான சேவை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: வால்பாறையில் முறையான சேவை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் முறையான சேவை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில், கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல் சேவை அடிக்கடி தடைபடுகிறது. இதன் காரணமாக தொலைபேசி சேவையும், இன்டர்நெட் சேவையும் பாதிக்கப்படுகிறது

அதேபோல, வால்பாறையில் ஏடிஎம் மற்றும் இணையவழி பண பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. மேலும் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி நடைபெற்று வருவதால் முறையான இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், இதனை கண்டித்து வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு, தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வால்பாறை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான சேவையை வழங்க வலியுறுத்தியும் தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு தகுந்த அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

வியாபாரிகள் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், எம்பி ஜாஜு, தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம் பாபுஜி, சுரேஷ் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...