கோவை: திமுக எம்.பி. ஆ.ராசாவை இழிவுபடுத்தியதாக பாஜக அகில இந்திய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் வெண்மணி என்ற வழக்கறிஞர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேட்டியை விமர்சித்து பாஜக அகில இந்திய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் டிவிட்டரில் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
'இந்த உலகத்தில் எதுவுமே புனிதம் இல்லை - திஹார் ராஜா, உங்கள் பிறப்பு அப்படி' என சாதியை குறிப்பிடும் வகையில் இழிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.