திருப்பூர்: திருப்பூரில் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிவரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதனிடையே, அரசு தலைமை மருத்துவமனைக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் பணியாற்றி வந்த வார்டு உட்பட அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும், அவருடன் பணியாற்றி வந்த செவிலியர்கள் சிலரும் மருத்துவ பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதோடு, திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவர் நடத்தி வந்த கிளினிக் (சிகிச்சையகம்), அவர் குடியிருந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.