கோவை: இலங்கையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அங்கடா லொக்கா, ஜூலை 3 ஆம் தேதி கோவையில் இறந்த நிலையில், அந்த வழக்கு குறித்த விசாரணையை தமிழக டிஜிபி நேற்று சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
கோவை: இலங்கையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அங்கடா லொக்கா, ஜூலை 3 ஆம் தேதி கோவையில் இறந்த நிலையில், அந்த வழக்கு குறித்த விசாரணையை தமிழக டிஜிபி நேற்று சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணைக்கான, ஆலோசனை கூட்டம் தொடங்கியது, இன்று ஐ.ஜி சங்கர் தலைமையில் கோவையில் தொடங்கியது.
டி.எஸ்.பி மாடசாமி, உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டதிற்கு பின்னர் சேரன் மாநகர் பகுதியில் இலங்கை தாதா தங்கியிருந்த வீட்டில் சோதனைக்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த மதுமாசந்தான லசந்தா பெரேரா (எ) அங்கடா லொக்கா (35). போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இவர் கோவை பீளமேட்டில் பிரதீப் சிங் என்ற பெயரில் பதுங்கியிருந்த நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி இவர் உயிரிழந்தார். இவரை இலங்கை போலீசார் வலை வீசி தேதி வந்த நிலையில் அவர் கோவையில் இறந்த தகவல் குறித்து தமிழக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் நேற்று கோவை வந்து, சிபிசிஐடி போலீஸாருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.