கோவை: தமிழகத்தில் குறிப்பாக கோவை உள்பட மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாதம் அவ்வப்போது மட்டும் பெய்து வந்த மழை, கடந்த சில நாட்களாக கோவையின் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பேரூர், தொண்டாமுத்தூர், ஜி.என் மில்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
மாநகர பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன் ஹால், உக்கடம், பந்தய சாலை, குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால் கோவை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.