திருப்பூர்: திருப்பூர் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொடுவாயில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருப்பூர் மாவட்டம் பொள்ளிகாளிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சாமிநாதன், ரத்தினம் (கணவன், மனைவி) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் பயணம் செய்த சுபாஷ் என்ற கல்லூரி மாணவன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற நான்கு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, படுகாயமடைந்த நான்கு பேரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். கல்லூரி மாணவன் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.