கோவை: கோவை அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஓரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
அதன்படி, போத்தனூர், மதுக்கரை, துடியலூர், உக்கடம், சூலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உதவி ஆய்வாளரின் மனைவிக்கும் தொற்று உறுதியானது. இதனையடுத்து, காவல் நிலையம் மூடப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் டெண்ட் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை எழுத்தர் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, வழக்கு தொடர்பாக கொரோனா தொற்று உள்ளவர்களுடன் பணியாற்றிய ஊர்க்காவல் படை பிரிவைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்களும் கடந்த வாரம் கோவில்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரிகளை எடுத்திருந்தனர்.
இதில் அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ ஒருவர், 2 பெண் தலைமை காவலர்கள், 2 முதல் நிலை பெண் காவலர், 4 முதல்நிலை காவலர்கள் என 9 பேருக்கும், 1 ஊர்காவல் படையை சேர்ந்தவர் என மொத்தம் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் தற்போது அன்னூர் காவல் நிலையத்தில் மூன்று பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 9 காவலர்கள் ஊர் காவல் படையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.