தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு பலி! மேலும் 5,609 பேருக்கு நோய் தொற்று..! 5,800 பேர் குணமடைந்தனர்!

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக இருந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5,609 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 5800 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 4,241 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 28 லட்சத்து 37 ஆயிரத்து 273 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,02,985ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவையில் இன்று மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,458 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நீலகிரியில் புதிதாக 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 849 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, திருப்பூரில் புதிதாக 45 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 994 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...