வாழ்வாதாரம் இழந்த தங்களை அகதிகளாக அறிவிக்கக் கோரி திருப்பூரில் வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்!

திருப்பூர்: வாழ்வாதாரம் இழந்த தங்களை அகதிகளாக அறிவிக்கக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: வாழ்வாதாரம் இழந்த தங்களை அகதிகளாக அறிவிக்கக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் வாகனங்கள் இயக்கப்படாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலை வரி செலுத்தும் முறையிலும் தங்களுக்கு சலுகைகள் வழங்கப்படாத நிலையில், ஆகஸ்ட் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தற்போது பழைய நடைமுறையே பின்பற்றப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக வேதனையுடன் கூறினார்.



அதேபோல, இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும், மண்டலங்களுக்கு இடையே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்த அவர்கள், இல்லையெனில் தங்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே வந்த ஓட்டுநர்கள் மண்டியிட்டு தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...