கோவை: கோவை பட்டணம்புதூர் பகுதியில் 3 வீடுகளை உடைத்து 12 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை பட்டணம்புதூர் பகுதியில் 3 வீடுகளை உடைத்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அடுத்த பட்டணம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. கடந்த 15 தினங்களுக்கு முன்னர் இவரது மனைவி சரண்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, பிறந்த குழந்தையுடன் சரண்யா ஆலாந்துறையில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை காண பிரபு ஆலாந்துறை சென்ற நிலையில், நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த டவுசர் கொள்ளையர்கள் முதலில் கண்ணன் என்பவரது வீட்டை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது, சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்தவர்கள் சத்தம் போடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். பின்னர் அதே பகுதியில் சற்று தொலைவில் உள்ள கார்த்தி என்பவரது வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போதும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் திருடன் திருடன் என கூச்சலிடவே கொள்ளை முயற்சியை கைவிட்ட கொள்ளையர்கள் சற்று தொலைவிலிருந்து இருந்த பிரபுவின் வீட்டின் பூட்டை கடப்பாரையால் நெம்பி வீட்டின் உள்ளே சென்றவர்கள் பீரோவை உடைத்து 12 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலையில் அருகில் வசிப்பவர்கள் பிரபுவின் வீடு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதே போல், தங்களது வீட்டிலும் கொள்ளை முயற்சியில் டவுசர் கொள்ளையர்கள் ஈடுபட்டதாக கண்ணன் மற்றும் கார்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, சமீபத்தில் கோவையில் நடமாடிய டவுசர் கொள்ளையர்களைப் போன்றே இந்த கொள்ளையர்களும் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.