திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இன்று துவக்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் தொலைபேசி வாயிலாக திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இன்று காலை 11 மணி முதல் தொலைபேசி வாயிலாக பொது மக்களிடமிருந்து குறைகள் பெறப்பட்டன.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணில் வந்த அழைப்புகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பேசி சம்பந்தப்பட்ட துறைக்கு குறைகளை பரிந்துரைத்தார்.
மேலும், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தொலைபேசி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.