திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் வெள்ளை அறிக்கை விட வேண்டும் - வானதி சீனிவாசன்

கோவை: திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் நடைபெற்ற ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.



இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய கல்வி கொள்கை அனைத்து தரப்பினரின் கருத்துகள் கேட்ட பிறகு கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூடுதல் மொழி படிப்பது குழந்தைகளுக்கு பலம் எனவும் பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் கல்வி நிலையங்களை விரும்புகின்றனர் என்றார்.

அதேபோல, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனவும் இரு மொழிக் கொள்கை நீடிக்கும் என்ற முதலமைச்சரின் அறிக்கை எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக தெரிவித்த அவர், பாஜக எந்த மொழியையும் திணிக்கவில்லை எனவும் மூன்றாவது மொழி கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், திராவிட கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது கல்வி கற்றுத் தரப்படுகிறது எனவும் அவர்களின் பிள்ளைகள் 3வது மொழி படிக்கிறார்கள் என கூறிய அவர், திமுக ஆதரவாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார்.

தீண்டாமைக்கு எதிராக பாஜக நாடு முழுவதும் பணி செய்து வருகின்றனர் எனவும் திராவிட கட்சியினர் தான் ஆணவக் கொலை செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், தாய் மொழியில் கல்வி கொடுக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது எனவும் அதிமுக, திமுக மற்றும் எதிர்கட்சிகள் மொழி அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறுவதாகவும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடங்கள் வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவிக்க தயாரா எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...