கோவை: காவல் நிலையங்களில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பாக காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தென்காசி விவசாயி முத்து படுகொலை, ராணிப் பேட்டையில் இளம்பெண் மீது காவல்துறை நடத்திய தாக்குதல், சாத்தான் குளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தென்காசி அணைக்கரை விவசாயி முத்துவை கொலை செய்த வனத்துறை காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ராணிப்பேட்டை ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை படுத்திய காட்பாடி ஆய்வாளர் புகழ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை படுகொலையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் வெண்ணிலா, நீதித்துறை நடுவர் சரவணன், காவல் நண்பர்கள் குழு ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தபெதிக, திராவிடர் தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, தி.வி.க உட்பட பல்வேறு அமைப்பினர் காவல் நிலைய சித்திரவதைகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.