கோவை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு உடனே திருப்பி செலுத்த வலியுறுத்தி ஆட்கள் வீட்டினுள் அமர்ந்து மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் பனிமலர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து உள்ளே அமர்ந்து கொண்டு கடனாக வாங்கிய தொகையை உடனடியாக செலுத்தினால் மட்டுமே வீட்டில் இருந்து வெளியேறுவோம் எனவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பொது போக்குவரத்து இல்லாமல் பலர் பணிக்கு செல்ல முடியாத சூழலில், உள்ளதாகவும் பெரும்பாலானோர் டிபன் கடை, மில் தொழிலாளர், ஓட்டுனர் என உள்ளதாக கூறினார்.
மேலும், தங்கள் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வெளியே செல்ல முடியாத சூழலில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், பணத்தை வட்டியுடன் செலுத்த தயாராக உள்ளதாகவும் கொரோனா தொற்று குறையும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.