சென்னை: தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (80) கொரோனா போண்ற அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 84 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மற்றும் அவருடன் பணியாற்றும் மற்ற மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம், ராஜ் பவனில் பணிபுரிந்தவர்களிடையே நடைபெற்ற 147 சோதனைகளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, ராஜ் பவன் முற்றிலுமாக கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பலர் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதற்கிடையில், தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.