கோவிட் 19: கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ நிவாரணப்‌ பொருட்கள் விநியோகம்!

கோவை: கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ நிவாரணப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணியினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்‌.



கோவை: கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ நிவாரணப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணியினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்‌.

கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ விழிப்புணர்வு பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று (01.08.2020) கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ குடும்பங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணியினைபுமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ 10 குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவண்குமார்‌ இ.ஆ.ப., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன, உதவி ஆணையர்‌ ரவி மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத் திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ கட்டுப்படுத்தும்‌ பணிகளாக அதிகளவிலான பரிசோதனை மேற்கொள்ளுதல்‌, தொடர்ச்சியான மருத்துவ முகாம்கள்‌ நடத்துதல்‌, தொடர்ச்சியாக வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தனிமைப்படுத்துதல்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினி கொண்டு தொடர்ச்சியாக சுத்தம்‌ செய்தல்‌ என பல்வேறு பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ 22 மாநகரப்பகுதிகள்‌, 9 ஊரகப்பகுதிகள்‌ உள்ள 115 தெருக்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக

அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தப்படும்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்‌ சார்பில்‌ இன்று முதல்‌ ரூ.1 கோடி மதிப்பில்‌ அரிசி, பருப்பு, சமையல்‌ எண்ணெய்‌, டீ தூள்‌, கடுகு, மிளகு, கோதுமை மாவு, துவரம்பருப்பு, மற்றும்‌ முகக்கவசம்‌ உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணி இன்று

தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகப்படியான பரிசோதனை நடைபெறும்‌ மாநிலம் தமிழ்நாடு தான்‌, அதிலும்‌ குறிப்பாக கோவை மாவட்டத்தில்‌ நாளொன்றுக்கு 3500க்கும்‌ மேற்பட்ட பரிசோதனைகள்‌ நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டத்தில்‌ இதுவரை 1,28,346 நபர்களுக்கு கொரோனா வைரஸ்‌ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்‌, (31.07.2020) அன்று வரை 4,816 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில்‌ மருத்துவமனைகளில்‌ சிகிச்சை பெற்று 3,325 நபர்கள்‌ தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்‌. பல்வேறு நோய்களால்‌ பாதிக்கப்பட்ட 54 நபர்கள்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 1442 நபர்கள்‌ சிகிச்சையில்‌ உள்ளனர்‌.

கொரோனா தொற்று சிகிச்சைக்கென

பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.எஸ்‌.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ 400 படுக்கைகளும்‌, அரசு மருத்துவக்கல்லூரி

மருத்துவமனையில்‌ 405 படுக்கைகளும்‌, பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில்‌ 160 படுக்கைகளும்‌, 10 அரசு மருத்துவமனைகளில்‌ 277

படுக்கைகளும்‌, தனியார்‌ மருத்துவமனைகளில்‌ 1679 படுக்கைகளும்‌, கொடீசியா உள்ளிட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில்‌ 1682 படுக்கைகளும்‌ என மொத்தம்‌ 4,497 படுக்கை வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும்‌, தற்போது புதியத்‌ தொற்று கண்டறியப்படுபவர்கள்‌ அந்தந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக பெரியநாயக்கன்பாளையம்‌ பகுதியில்‌ கே.டி.வி.ஆர்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ 400 படுக்கை வசதிகள்‌, பொள்ளாச்சி பி.ஏ கல்லூரியில்‌ 200 படுக்கை வசதிகள்‌, மேட்டுப்பாளையம்‌ நஞ்சை லிங்கம்மாள்‌ திருமண மண்டபத்தில்‌ 100 படுக்கை வசதிகள்‌, ஹிந்துஸ்தான்‌ மருத்துவமனையில்‌ 100 படுக்கை வசதிகள்‌, கொடிசியா மையத்தில்‌ கூடுதலாக 200 என 1000 படுக்கை வசதிகள்‌ கூடுதலாக

ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகளவிலான பரப்பளவையும்‌, மக்கள்‌ நெருக்கத்தையும்‌ கொண்ட கோவை மாவட்டத்தில்‌, கொரோனா வைரஸ்‌ தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு இங்குள்ள மக்களின்‌ ஒத்துழைப்பும்‌, அதிகாரிகளின்‌ அர்ப்பணிப்புள்ள பணியும்தான்‌. மேலும்‌, பொதுமக்கள்‌ தொடர்ந்து அரசு வழங்கும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி கொரோனாவை கோவையிலிருந்து முற்றிலும்‌ துரத்தியடித்து உலகிற்கே முன்மாதிரியாக மாறவேண்டும்‌ என அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...