திட்டமிட்டபடி விநாயகர்‌ சதுர்த்தி விழா எளிய முறையில்‌ சிறப்பாக கொண்டாடப்படும் - திருப்பூரில் காடேஸ்வரா சுப்பிரமணியம்‌ தகவல்!

திருப்பூர்: திட்டமிட்டபடி விநாயகர்‌ சதுர்த்தி விழா எளிய முறையில்‌ சிறப்பாக கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி மாநிலத்‌ தலைவர்‌ காடேஸ்வரா சுப்பிரமணியம்‌ தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திட்டமிட்டபடி விநாயகர்‌ சதுர்த்தி விழா எளிய முறையில்‌ சிறப்பாக கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி மாநிலத்‌ தலைவர்‌ காடேஸ்வரா சுப்பிரமணியம்‌ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழகத்தில்‌ கொரோனா சூழல்‌ காரணமாக தற்போது ஆகஸ்ட்‌ 31ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சமயத்தில் முழு முதற்கடவுள்‌ விநாயகரின்‌ சதுர்த்‌து விழா வருகிறது.

இது இந்துக்கள்‌ அனைவரது வீட்டிலும்‌ கொண்டாடப்‌படும்‌ விழா. விநாயகர்‌ சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால்‌ தெய்வகுற்றம்‌ கட்டாயம்‌ ஏற்படும்‌ என்பதும் மிகப்‌பெரும்‌ நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும்‌ என்றால்‌ கட்டாயம்‌ கடவுள் அனுக்கிரகம்‌ தேவை.

இவற்றையெல்லாம்‌ கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம்‌ இந்த வருடம்‌ கொரோனாவை விரட்டும்‌ வகையில்‌ விநாயகர்‌ சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம்‌ எளிய முறையில்‌ கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, விநாயகர்‌ சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள்‌ இல்லாமல் எளிய முறையில்‌ சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின்‌ வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது. கொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள்‌ மன உளைச்சலில் உள்ளனர்‌. பல தற்கொலைகள்‌ இதன்‌ காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத்‌தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால்‌ மனிதன்‌ கடவுளை நாடித்தான்‌ தீர்வு காண்பான்‌.

ஆகவே, விநாயகரிடம்‌ முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர்‌ சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில்‌ செய்து கொடுக்க வேண்டும்‌. மேலும்‌, மக்கள்‌ அவரவர்‌ இல்லங்களில்‌ குறைந்தபட்சம்‌ மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர்‌ பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம்‌ மாறிட மனமார பிரார்த்தனை செய்திட வேண்டும்‌ என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...