கோவை: கோவையில் 8 அடி நீளம் கொண்ட பாம்பை சர்வ சாதாரண தரதரவென ஒரு நபர் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவையில் 8 அடி நீளம் கொண்ட பாம்பை சர்வ சாதாரண தரதரவென ஒரு நபர் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று இருப்பதாக பொது மக்களிடையே தகவல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர்.
புதருக்குள் புகுந்து கொண்ட அந்த பாம்பை கூட்டத்தில் இருந்த குமார் என்ற நபர் கையில் இருந்த டார்ச் லைட் வெளிச்சத்துடன் ஒளிந்திருந்த 8 அடி பாம்பின் வாலை பிடித்து தரதர என இழுத்து வந்தார்.
இதனை கண்ட அங்கு கூடியிருந்த மக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழி உள்ள நிலையில் பாம்பை சர்வ சாதரணமாக கையில் பிடித்து தரதரவென இழுத்து வந்த காட்சியை அங்கு கூடி இருந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்ததுடன் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அது தற்போது வைரலாக பரவி வருகிறது.