கோவை: கோவை சிட்கோ நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது வீட்டின் அருகில் திருநெல்வேலி திசையன்விளை பகுதியை சேர்ந்த இசக்கிலிங்கம் (21) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் முத்து விலாஸ் என்ற பலகார கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் அபுபக்கர் சித்திக்கின் மனைவியும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இசக்கிலிங்கத்திற்கும், அபுபக்கரின் மனைவிக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பல முறை எச்சரித்தும் இருவரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 30 ம் தேதி மாலை அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இசக்கிலிங்கம் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த, அபூபக்கர் வீட்டில் இருந்த பூரிகட்டையால் இசக்கிலிங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிலிங்கம், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இசக்கிலிங்கம் உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இறந்தபோது முதலில் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது முறையற்ற உறவு காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் அபுபக்கர் சித்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.