கோவையில் பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவை ரத்னபுரி சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(49). இவரது மகள் சுவாதி (17).

கோவை: கோவை ரத்னபுரி சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(49). இவரது மகள் சுவாதி (17).

இவர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், மனமுடைந்த நிலையில் மாணவி சுவாதி இருந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் சுவாதி, தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுவாதியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்திற்காக பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...