தென்மேற்கு பருவமழை: ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு மேல் நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு

கோவை: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஆகஸ்டில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு, என கோயம்புத்தூர் வெதர்மேன், சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகிறார்.

கோவை: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஆகஸ்டில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு, என கோயம்புத்தூர் வெதர்மேன், சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகிறார்.

அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு:

"நாம் முன்பு எதிர்பார்த்தது போலவே மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகஸ்ட் முதல் வாரத்தில் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும்", என்று சந்தோஷ் தெரிவித்தார். 

மேலும், கன மழையானது ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை தொடர அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது எனவும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக கூடும், என்று தெரிவித்தார். 

"இந்த கனமழை காரணமாக ஆகஸ்ட் முதல் வார இறுதியில் மேட்டூர், பவானி சாகர், பில்லூர், சிறுவாணி, அமராவதி ஆழியாறு, வைகை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவிரைவாக உயரக்கூடும்" என்று கூறுகிறார் சந்தோஷ்.

நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு:

"குறிப்பாக, பாலக்காடு கணவாய் மற்றும் மேற்கு கோயம்புத்தூர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பதிவாக கூடும், எனவும் நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி, வால்பாறை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மலைப்பிரதேசங்களில் அதிதீவிர கனமழை ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் பதிவாக கூடும்", என்று தெரிவித்தார். 

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு சேலம் ஆகிய நகரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசான சாரல் மழை ஆகஸ்ட் 2 லிருந்து பெய்யக்கூடும். தென் தமிழகத்திலும் இதே சூழ்நிலை நிலவும். சென்னை உட்பட வடக்கு தமிழகம் மட்டும் டெல்டாவில் ஆங்காங்கே மிதமான மழை பதிவாக கூடும், என்று தெரிவித்தார். 

வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

நல்ல மழைக்கான சூழல் உள்ளதால், விவசாய மக்கள் அதற்கு ஏற்ப விவசாய பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டால் பயன் பெறலாம் என்று ஆலோசனை வழங்கினார். 

குறிப்பாக, மேற்கு கோவையில் அதிகமாக வெங்காய விவசாயம் செய்யப்பட்டு வருவதால், விவசாயிகள் தங்களது அறுவடையை விரைவாக முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர், என்றார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...