கோவை: கோவை மாவட்டத்தில் நரம்பியல் துறையில் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தோற்றால் நேற்று இரவு உயிரிழந்தார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் M.B.பிரேனேஷ் (83). நரம்பியல் மற்றும் மூளை நோய் துறையின் பேராசிரியரான இவர் கோவை அரசு மருத்துவமனை, கேஜி மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, உள்ளிட்ட பல மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அதேபோல, சொந்தமாகவும் கோவை ராம் நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவரின் துல்லியமான சிகிச்சைக்காக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயது மூப்பினால் உடல்நிலை பாதிக்கப்பட்டட மருத்துவர் பிரனேஷ் பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகளையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர் பிரேனேஷ் அவரது இறப்பிற்கு சக மருத்துவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், நோயாளிகளை அன்புடன் நடத்துவதில் மருத்துவர் பிரனேஷ் ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் புகழாரம் தெரிவித்துள்ளனர்.