கோவையில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பங்களுடன் வீடுகளில் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் குடும்பங்களுடன் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் குடும்பங்களுடன் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, பிறை தெரிவதை வைத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே இன்று சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், சாய்பாபா காலனி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...