கோவையில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு!

கோவை: தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 89 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் கோவையில் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என உலா வந்தது.



இதனையடுத்து, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்க் பொறியியல் கல்லூரிகளின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி கூறுகையில், இந்த விவகாரம் கடந்த வருடம் முதலே பரப்பப்பட்டு வருகிறது எனவும் இது தவறான தகவல் எனவும் இது குறித்து அண்ணா பல்கலை மறுப்பு தெரிவித்ததோடு, விளக்கமும் அளித்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது இவ்வாறு தவறான செய்திகளை சமூக வலை தளங்களில் பதிவு செய்ததாகவும் இந்த வருடமும் இதனை சிலர் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் புகார் மனு அளித்து வருவதாக தெரிவித்த அவர், சைபர் கிரைம் மூலம் இவ்வாறு தவறான தகவல்களை பரிமாறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளதாக கூறினார்.

மேலும், இது போன்ற செயல் குற்றவியல் நடவடிக்கை என்றும் இதனை பார்வார்டு செய்வதும் குற்றமே என்றவர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...