பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் 6 மாதங்களுக்கு பிறகு மரக் கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜா..! முத்து என பெயரிடப்பட்டு சிறப்பு பூஜை!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் ஆறு மாத காலம் மரக் கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜை செய்து வனத்துறையினர் வரவேற்றனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் ஆறு மாத காலம் மரக் கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜை செய்து வனத்துறையினர் வரவேற்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் நவமலை பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மலைவாழ் மக்கள் இருவர் மற்றும் விவசாயி ஒருவர் உயிரிழந்தனர்.

மேலும், மலை அடிவார பகுதியில் தென்னை தோப்பு விவசாய நிலங்களை அழித்து பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் விவசாயிகள் நாலுமுக்கு சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வனத்துறையினர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி கலீமை வரவழைத்து அர்த்தநாரி பாளையத்தில் கடந்த 14-11-2019ல் பிடிக்கப்பட்ட அரிசி ராஜா அதே நாளில் டாப்சிலிப் வரகளியாறு மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதம் காலத்திற்கு பிறகு அரிசி யானை, பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், பாகன்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஜூலை 21ம் வெளியே கொண்டுவரப்பட்டது.



மேலும், மர கூண்டில் இருந்து வெளியே வந்த அரிசி ராஜாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வனத்துறையினர் மற்றும் பாகன்கள் அரிசி ராஜாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் ஆரோக்கிராஜ் கூறுகையில், அரிசி ராஜாவிற்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

மேலும், முத்துவுக்கு பாகன்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளதாகவும் வரும் 12ம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன் அரிசி ராஜா (எ) முத்துவும் பங்கேற்பான் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...