கோவை நஞ்சுண்டாபுரத்தில் வாய்க்கால் கரையோரம் கார்ஷெட் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோவை: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் வாய்க்கால் கரையோரம் கார்ஷெட் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கார்ஷெட் இன்று அகற்றப்பட்டது.

கோவை: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் வாய்க்கால் கரையோரம் கார்ஷெட் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கார்ஷெட் இன்று அகற்றப்பட்டது.

நஞ்சுண்டாபுரத்தில் உள்ள வாய்க்கால் கரையோரம் 1 செண்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கார் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, தெற்கு தாசில்தார் அருள்முருகன், மண்டல துணை தாசில்தார் செல்வம், நில வருவாய் ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆக்கிரமிப்பு பணிகளை தடுத்து நிறுத்தினர்.



மேலும், இந்த இடம் அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு தாசில்தார் அருள்முருகன் எச்சரித்ததையடுத்து ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்தினர்.

இது குறித்து தாசில்தார் அருள்முருகன் கூறுகையில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...