கோவை: மேட்டுப்பாளையம் வனசரகத்தில், நெல்லிமலை காப்புக்காட்டில் நேற்று உயிருக்கு போராடி வந்த யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

நெல்லி மலை காப்புக்காட்டில் ஒரு யானை கூட்டத்துடன் சுற்றி வந்து 9 -10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு, உடல் சோர்வு அடைந்த நிலையில் நகர சிரமப்படுவதை ரோந்து பணியில் உள்ள பணியாட்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், பகல் நேரத்தில் அந்த நோயுற்ற யானையை கண்டுபிடிக்கமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து,ப்யானைகள் கூட்டமாக இருப்பதால் சோர்வுற்ற யானையை கண்டுபிடிப்பது மிகுந்த சவாலாக இருந்துள்ளது. நேற்றும், அந்த யானையை தேடிய நிலையில் நெல்லிமலை காப்புக்காட்டில் உயிருக்கு போராடிய நிலையில் தரையில் படுத்திருப்பதை கண்ட அதிகாரிகள் தேக்கம்பட்டியை சேர்ந்த வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்த மருத்துவர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார். மேலும் மாவட்ட வன மருத்துவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை அந்த யானை இறந்துவிட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், யானையின் மேல் இடது தாடையின் கடவாய் பற்களுக்கு முன்னால் 20 செ. மீ ஆழம் மற்றும் 9 செ. மீ விட்டம் அளவிலான காயம் இருப்பது கண்டறியப்பட்டது, என்றனர்.
இந்த காயம் மற்றொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டிருக்கலாம் எனவும் காயத்தில் சீல் மற்றும் புழுக்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது, இறந்த யானைக்கு அடிப்பட்டு 8 முதல் 10 நாட்களாக இருந்திருக்கலாம். மேலும் காயத்தின் காரணமாக உணவு ஏதும் சாப்பிடாமல் மிகுந்த சோர்வடைந்து இறந்திருக்ககூடும், என தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யானையின் வாயில் ஏற்பட்ட புண் சண்டையினால் ஏற்பட்டதா..? இல்லை மனிதர்கள் ஏதும் தீங்கு விளைவித்து இருப்பார்களா..?என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த தொடர் மரணங்கள் குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும், வன ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.