கோவை: பொள்ளாச்சியில் மதிமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதிமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன் தலைமையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களின் பேட்டியின் போது, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் நீட் தேர்வை அமல்படுத்தி கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது போல் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற நிலை உருவாகும், தேர்வுகளுக்கு கோச்சிங் சென்டர் என்ற நிலையில் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகும்.
அதேபோல, மாணவர்கள் 3 , 5, 8, வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதால் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த வித கருத்து செல்லாததை வண்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாநில அதிகாரத்தை பறித்து மத்திய அரசில் குவிக்கும் இந்த கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மும்மொழி கொள்கை மாணவர்களிடம் பணிச்சுமையைத்தான் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் செயல் என்றும் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெறவில்லை என்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை திரட்டி பெரும் அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.