சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் யானை தந்தங்களை கடத்தி வந்த இருவர் கைது - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தூ.நா பாளையம் வனச்சரக எல்லையில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் ஒருவார காலமாக சக்தி-அத்தாணி சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன பரிசோதனையும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தனிக்குழுவினர், சுமார் 10 மணியளவில் இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் கடத்தி வருவதை கண்டுபிடித்தனர். விசாரணையில் மேலும் இருவருக்கும் பங்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த தந்தங்கள் அந்தியூர் அருகே இறந்து கிடந்த யானையில் இருந்து எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு யானை இறந்த செய்தி கூட வெளியாகாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல, சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...