ஈரோடு: ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமாபுரம் அருகே தண்டவாளத்தில் 4 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகுடஞ்சாவடி - மாவேலிபாளையம் இரயில் நிலையங்களுக்கிடையே செம்மங்குளம், கருமாபுரம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கோவை நோக்கி கூட்ஸ் ரயில் வந்த போது, தண்டவாளத்தில் இருந்த சுமார் 4 கிலோ எடை கொண்ட கல் மீது மோதி நின்றது.
இதனை தொடர்ந்து, இது சம்மந்தமாக ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று மாலை தண்டவாளப்பாதையில் கல்லை வைத்து நாச வேலையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அருண் என்ற 17 வயது சிறுவனை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, குற்றவாளியை விரைவாக கைது செய்த ரயில்வே காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.