திருப்பூர்: தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு எனவும் நேரடியாக எங்களை சந்திக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர்: தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு எனவும் நேரடியாக எங்களை சந்திக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ஆவின் தொகுப்பு பால் குளிரகத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பால்வள ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனியாக துவக்கப்பட்டு 2.60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் மையங்கள் துவக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் சேர்க்கை துவங்குகிறது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுகிறது. பால் உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார் அவர், கூடுதல் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அதேபோல, மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து கேட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு, நேரடியாக எங்களை சந்திக்கலாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.