மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்காக போராடும் யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்காக போராடும் யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு உயிருக்காக போராடும் யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலம் என்பதால் கோவை வனக்கோட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இருக்கும் யானைகளை கண்காணிக்கும் பணியினை தீவிரப்படுத்துமாறு மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று அதிகாலை நெல்லிமலை காப்புக்காட்டில் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறை அதிகாரிகள் ஒரு ஆண் யானை நகர்வதற்கு சிரமப்படுவதைப் பார்த்துள்ளனர்.

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பகல் நேரத்தில் யானையை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், யானைகள் கூட்டமாக சுற்றுவதால் நோய்வாய்ப்பட்ட யானையை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.

இந்த நிலையில், இன்றும் பணியாளர்கள் தேடிய நிலையில், நெல்லிமலை காப்புக்காட்டின் எல்லையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வனத்திற்குள் யானை ஒன்று உடல் நலக்குறைவால் தரையில் படுத்து உயிருக்கு சிரமப்படுவதைப் பார்த்த அதிகாரிகள் தேக்கப்பட்டியை சேர்ந்த வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.



வாயில் காயம் பட்டு இருப்பதால், உணவு எடுத்துக் கொள்ளாமல் கீழே விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீப நாட்களாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இப்பொழுது ஆண் யானை உடல் நலம் குன்றி இருப்பது சந்தேகம் அளிப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...