திருப்பூர்: பல்லடம் அருகே இடத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வயதான தம்பதியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரடிவாவி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து கவுண்டர் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4.75 சென்ட் நிலம் உள்ளது.
இந்நிலையில், இவரது நிலத்தின் மீது உரிமை கோரி இவரது சகோதரி கருப்பாத்தாள் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு நாச்சிமுத்து கவுண்டருக்கு சாதகமாக வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான மேலும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில் கடந்த 10ம் தேதி சல்லடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர் ஜெயாபாலு உள்ளிட்டோர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து 40 வருட பழமையான மரத்தை அடியோடு பிடுங்கி விற்றுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் அவரது மனைவியும், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பதாக கூறி அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.