அரசு மருத்துவ ஊழியர்களை அவதூறாக பேசிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்!

சென்னை: மருத்துவ ஊழியர்களை அவதூறாக பேசிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை: மருத்துவ ஊழியர்களை அவதூறாக பேசிய மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை எதிர்த்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றி பல அவதூறுகளை நேற்றை தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிதாஸ் பேசியுள்ளார்.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கு யு டியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார்.

இம்மாதிரியான பேச்சுக்களை புறம் தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும் இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியில் வருத்தத்தையும் மக்களின் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. கோவிட் ஒழிப்பு பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18,000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாகத் தவறாகப் பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...