கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், கட்டாய முககவசம், ஊரடங்கு நேரத்தை கடந்து தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 4344 எட்டியுள்ளது.

இந்நிலையில் கோவை சுந்தராபுரம் முருகா நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 59 வயது மற்றும் 55 வயது சகோதரர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்களுடன் 70 மற்றும் 69 வயது மூதாட்டி இருவர், இவர்களின் மனைவிகள் குழந்தைகள் என ஒன்பது பேர் கூட்டு குடும்பமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அனைவரும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுகாதார நிலையம் சென்று பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். இன்று அதன் முடிவில் வெளியானதில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவர்கள் வசித்த பகுதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேபோல, கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. இங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர், சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆய்வாளரின் மனைவிக்கும் நோய் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட உள்ளது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...