கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட புகார் அளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு!

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வாலிபர் ஒருவர் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வாலிபர் ஒருவர் புகார் அளிக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது மனைவி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, கொரோனா காலம் என்பதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சாலை ஓரத்திலேயே படுத்து உறங்கியும், அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று கோவை வாலாங்குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தவர், மீன் பிடித்து கொண்டிருக்கையில் அங்கிருந்த சிலர் மீன் பிடிக்கக் கூடாது என கூறி இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ராஜரத்தினத்தை மற்றவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டும், கை கால்களில் ரத்தம் வழிய வழிய அதே நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

அப்போது, ரத்தம் சொட்ட சொட்ட ஆணையர் அலுவலகம் வந்த நபரை கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போலீஸ் வாகனத்தில் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து தனக்கு நீதி வேண்டும் எனவும் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...