கோவை: மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வரும் நிலையில், இங்கு 900 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், போதிய கட்டிட வசதியின்றி செயல்பட்ட இந்த கல்லூரிக்கு கடந்தாண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டும் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில போதிய இருக்கைகள், டேபிள், பேஞ்ச் போன்றவை இல்லை. இதேபோல் பேராசிரியர்களுக்கும் இதேநிலை தான் இருந்து வந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியில் இருந்து சுமார் ரூ.23 லட்சம் மதிப்பில் கல்லூரிக்குத் தேவையான கல்வி உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் வழங்கினார்.
இதில் மொத்தம் 900 மாணவ மாணவிகள் கல்வி பயிலும் இந்த கல்லூரிக்கு தேவையான டேபிள், சேர், பேஞ்ச் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான அலமாரிகள், பீரோக்கள் என அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முன் அனைத்து கல்வி உபகரணங்களும் கிடைக்கப் பெறுவதால் மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக அமையும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமாறன், வட்டாட்சியர் சாந்தாமணி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.