ஆகஸ்ட் மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - முதலமைச்சர்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை ஊரடங்கை நீட்டித்து புது விதிமுறைகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில். கடைபிடிக்கப்படும் புதிய ஊரடங்கு உத்தரவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.



சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை ஊரடங்கை நீட்டித்து புது விதிமுறைகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில். கடைபிடிக்கப்படும் புதிய ஊரடங்கு உத்தரவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 

அதில், ஜூலை மாதம் போல், ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை தொடரும் எனவும் அதில் தளர்வு ஏதும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்‌ நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்‌.

அனைத்து, தொழில்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்கள்‌ தங்களது ஊழியர்கள்‌ / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களில்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்‌. 

பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, பயிற்சி நிறுவனங்கள்‌, ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்கள், இணைய வழிக்‌ கல்வி கற்றலை தொடர்வதுடன்‌ அதனை ஊக்குவிக்கலாம்‌.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி என அறிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு தொடரும், 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் தொடர்ந்து இருக்கும்.

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.

டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி. மேலும், உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி.

ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலையே தொடரும். பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.

ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...