கோவை: கோவை சூலூர் பகுதியில் அமைந்துள்ள மளிகை கடையில் சிறுவர்கள் விளையாட கூடிய விசில் மற்றும் சிறிய விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருளிலான விசில்கள் விற்கப்பட்டு வருகிறது.

இந்த விசிலை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவன் 5 ரூபாய் கொடுத்து விசிலை வாங்கி உள்ளான்.
விளையாடிய பிறகு விசிலில் சத்தம் வராத காரணத்தினால் புகைப்பட சுருளை பிரித்து பார்த்தபோது சுருளில் இருந்த புகைப்படங்கள் மிக ஆபாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளான்.
இதனையடுத்து, அதே கடையில் மற்றொரு விசில் வாங்கி பிரித்து பார்த்தபோது அதிலும் ஆபாச படங்கள் உள்ள சுருள் தான் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் சூலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையில் இருந்த புகைப்பட சுருள் விசில்களை பறிமுதல் செய்தனர்.
கடையின் உரிமையாளர் பாலகுமாரிடம் விசில் வாங்கிய இடம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.