கோவை: கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிபுதூர் பகுதியில உள்ள பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார் (43). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் சக்தி ஸ்பின்னிங் மில் என்ற நூற்பாலை நடத்தி வந்தார். மேலும் கார் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளார்.
இதனிடையே, தொழில் நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக விஜயகுமார் விரக்தியடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 28 ம் தேதி ஸ்பின்னிங் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மில்லின் மேலாளர் எத்திராஜ் சென்று பார்த்த போது விஜயகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து எத்திராஜ் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து விஜயகுமாரின் மைத்துனர் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர், விஜயகுமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.