கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஒண்டிபுதூர் பகுதியில உள்ள பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார் (43). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் சக்தி ஸ்பின்னிங் மில் என்ற நூற்பாலை நடத்தி வந்தார். மேலும் கார் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளார். 

இதனிடையே, தொழில் நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக விஜயகுமார் விரக்தியடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 28 ம் தேதி ஸ்பின்னிங் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மில்லின் மேலாளர் எத்திராஜ் சென்று பார்த்த போது விஜயகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இது குறித்து எத்திராஜ் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து விஜயகுமாரின் மைத்துனர் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர், விஜயகுமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...