கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கைகள்:
அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற பிற மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள், கோவைக்கு மீண்டும் திரும்பி வர ஏதுவாக, பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும்.
தொழிற்சாலைகளால், தனியாக பஸ் ஏற்பாடு செய்து பிற மாநில தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை.
மாநிலந்தழுவிய ஊரடங்கு அறிவிப்புகளை தவிர்த்து, நோய் தொற்று அபாயம் அதிகமாக உள்ள இடங்களுக்கு மட்டும் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும்.
பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி தேவை என்பது தொடரப்பட்டால், தொழிற்சாலைகளுக்கு இ-பாஸ் தடையின்றி, எளிதாக வழங்கி, தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும்.
அரசு அல்லது தனியார் தொழிற்சாலையில் ஏதேனும் ஒரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், முழு தொழிற்சாலையையும், பல நாட்களுக்கு மூடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் வங்கி சேவையை நிறுத்த வேண்டாம். இதனால் சிறு, குறு தொழில்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடனுதவிகளை வங்கிகள் அளிப்பதில் தாமதம் தவிர்க்கப்படும்.
தமிழக பொருளாதார கட்டமைப்பின், முதுகெலும்பாய் விளங்கும், சிறுகுறு தொழில்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து, புத்துணர்வுடன் மீண்டுவர இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.