கோவையில் ரூ.60 கோடி பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது - மேலும் 5 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

கோவை: கோவையில் 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: கோவையில் 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஐந்து பேரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பங்கஜா மில்ஸ் பகுதி அருகில் உள்ள கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற எம்.எல்.எம் கம்பெனி இயங்கி வருகிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரில் சித்தி விநாயகா டிரேடிங் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், இதன் உரிமையாளர்களான மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர்.



மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகைகள் ஆகியோருடன் இருந்த புகைப்படங்களை காண்பித்து விளம்பரங்கள் செய்து உள்ளனர்.



அவர், சச்சின் டெண்டுல்கருடன் எடுக்கப்பட்ட புகைபபடங்கள் போலியாக இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்

தினமும் 0.5 சதவீதம் தருவதாக கூறியவர், முதலில் அதனை வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாகவும், கடந்த மே மாதம் முதல் பணம் வராத காரணத்தால் முதலீட்டாளர்கள் கேட்டபோது, காலம் தாழ்த்தியதுடன் பணம் செலுத்தியவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து, இன்று காலை எம்.எல்.எம் உரிமையாளர் இல்லத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் தமிழகம் முழுவதும் 8000 மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, முதலீடு செய்தவர்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 60 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இவர்கள் மீது 120b,406, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த நிறுவனத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் மற்றும் பங்குதாரர்களாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...