திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 795 ஆக உயர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 795 ஆக அதிகரித்துள்ளது. இதில் தாராபுரம் பகுதியில் 3 பேருக்கும், தேவம்பாளையம் பாலாங்கரையில் 2 பேருக்கு, பொங்கலூர், கொண்டாம்பட்டி, வள்ளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணமடைந்தனர். அதேபோல, 315 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் இன்று 968 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 270 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 278 பேர் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது திருப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...