கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

கோவை: கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை துடியலூர் போலிசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கவுண்டம்ளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை துடியலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த டிரைவர் காலனி பகுதியில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, அங்கு சென்ற துடியலூர் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் டிரைவர் காலனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

வீட்டில் குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த துடியலூர் போலீசார் குட்காவை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் சந்திரசேகர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...