திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வாகனம், காங்கேயம் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதை கவனிக்காமல் வந்த ஒரு இரு சக்கர வாகனம், மாநகராட்சி வாகனத்தின் மீது பலமாக மோதியது. அதில் பயணம் செய்த இரு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்கள், பெரிய தோட்டத்தை சேர்ந்த கரீம் மற்றும் குண்ணங்கல்காடு பகுதியை சேர்ந்த கரண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.