நியூஸ் 18 தொடர்ந்த அவதூறு வழக்கில் மாரிதாஸ் பதிவிட்ட வீடியோக்களை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் நியூஸ் 18 நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் நியூஸ் 18 நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில், அவர் நியூஸ்18 குறித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களை உடனடியாக நீக்க இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. 

கடந்த ஜூலை 17 ஆம் தேதி, நியூஸ் 18 அசோசியேட் எடிட்டர் வினய் சரவாகி, மரிதாஸ் என்பவர் தன் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். 

ஒரு போலி அஞ்சலை அனுப்பும் ஒரே நோக்கத்திற்காக அந்த மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டது, பின்னர் நீக்கப்பட்டது என்பது மின்னஞ்சல் நிறுவனம் புரோட்டான்மெயில் உறுதி செய்தது. 

வினய் சரவாகி அளித்த புகாருக்கு எதிராக ஐபிசியின் பல பிரிவுகளின் (465, 469, 471) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 (பி) மற்றும் 41 ஆகியவற்றின் கீழ் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

இந்த நிலையில், மாரிதாஸ் மீது 1.5 கோடி மானநஷ்டயீடு வழக்கு, நியூஸ் 18 நிறுவனத்தினர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக, நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...