குறுகிய அரசியல் லாபத்திற்காக சாலையில் வேல் வரைவோர மீது நடவடிக்கை எடுக்க கோவை சிபிஎம், சிபிஐ கட்சிகள் காவல்துறையில் புகார்

கோவை: அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்கள் வணங்கக்கூடிய வேல் உருவத்தை சாலையில் வரைந்து அவமதித்துள்ள அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை: அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்கள் வணங்கக்கூடிய வேல் உருவத்தை சாலையில் வரைந்து அவமதித்துள்ள அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கோவை மாநகர மத்திய உதவி ஆணையர் கார்த்திகேயனிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: 

அண்மையில் பெரும் பகுதி தமிழ் மக்கள் வழிபடக்கூடிய முருகன் துதி பாடலான கந்த சஷ்டி கவசம் குறித்து தேவையற்ற பதிவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டத்தை இருகட்சிகளின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் வன்மையாக கண்டிகின்றோம்.

அதேசமயம், பெரும் பகுதி தமிழக மக்கள் வழிபடக்கூடிய முருகனின் அடையாள சின்னங்களில் ஒன்றான வேல் சின்னத்தை சாலையில் வரைந்தும், முருகன் துதி கோசத்தை தரையில் ஏழுதி அசிங்கப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. 

இவ்வாறு குறுகிய அரசியல் லாபத்திற்காகவும், சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க் கூடிய வகையில் சில அமைப்புகளின் நடவடிக்கைகள் கோவை மக்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதை காவல் துறை விழிப்புணர்வுடன் கண்காணித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும், தமிழ் மக்கள் வழிபடக் கூடிய முருகன் சின்னத்தை தரையில் வரைந்ததால் மனித கால் தடம் பதிக்க கூடிய வாய்ப்பு மற்றும் வாகனங்கள் அதன் மீது ஏறி செல்லும் வாய்ப்பு இருப்பதை அறிந்தும் கூட சாலைகளில் வேல் சின்னத்தை வரைந்து அசிங்கப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

எனவே, இவ்வாறு மோசமான செயலில் ஈடுபட்ட அமைப்புகள் மீதும், நபர்கள் மீதும் எவ்வித நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் நடவடிக்கை எடுத்திட இரு கட்சிகளின் கோவை மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியம் மற்றும் யு.கே.சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...